சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை பெருமாள் தீர்த்து வைத்ததால் இத்தலம் 'தலைச்சங்க நாண்மதியம்' என்று அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு 'நாண்மதியப் பெருமாள்' என்ற திருநாமம் ஏற்பட்டது.
மூலவர் நாண்மதியப் பெருமாள், வெண்சுடர் பெருமாள் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் வியோமஜோதிப்பிரான் என்றும் வெஞ்சுடர்பிரான் என்றும் வணங்கப்படுகின்றார். தாயார் தலைங்சங்க நாச்சியார் என்றும் உத்ஸவ நாச்சியார் செங்கமலவல்லித் தாயார் என்றும் வணங்கப்படுகின்றனர். சந்திரன், தேவர்கள், தேவப்ருந்தங்கர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|